search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மாம்பழத்துறையாறு அணை"

    • மாங்காடு-முஞ்சிறை சாலையில் தண்ணீர் தேங்கியுள்ளதால் பொதுமக்கள் கடும் அவதிக்கு ஆளாகியுள்ளனர்.
    • திற்பரப்பு அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது.

    நாகர்கோவில்:

    குமரி மாவட்டத்தில் கொட்டி தீர்த்து வரும் மழையின் காரணமாக மாவட்டம் முழுவதும் தாழ்வான பகுதிகளில் உள்ள குடியிருப்புகளை மழைநீர் சூழ்ந்துள்ளது.

    அணையின் நீர்பிடிப்பு பகுதிகளிலும், மலையோர பகுதிகளிலும் கொட்டி தீர்த்து வரும் மழையின் காரணமாக ஆறுகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. தாமிரபரணி ஆறு வள்ளியாறு, பெரியாறு, கோதையாறுகளில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கின் காரணமாக கரையோர பகுதியில் உள்ள குடியிருப்புகளுக்கும் விளைநிலங்களுக்குள்ளும் தண்ணீர் புகுந்தது. இதனால் பொதுமக்கள் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர்.

    மாங்காடு-முஞ்சிறை சாலையில் தண்ணீர் தேங்கியுள்ளதால் பொதுமக்கள் கடும் அவதிக்கு ஆளாகியுள்ளனர். வீட்டை விட்டு வெளியே வர முடியாமல் அவர்கள் தவித்து வருகிறார்கள். திக்குறிச்சி பகுதிகளிலும் குடியிருப்புகளை தண்ணீர் சூழ்ந்துள்ளது. அந்த பகுதியில் உள்ள விளைநிலங்களையும் தண்ணீர் சூழ்ந்துள்ளதால் பொதுமக்கள் தவிப்பிற்குள்ளாகி உள்ளனர். சுசீந்திரம் பழைய ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கின் காரணமாக சுசீந்திரம் பகுதியில் உள்ள குடியிருப்புகளை தண்ணீர் சூழ்ந்துள்ளது.

    மேலும் அந்த பகுதியில் உள்ள விளைநிலங்களுக்குள் தண்ணீர் புகுந்தது. வடக்கு தாமரைகுளம் பகுதியில் தென்னந்தோப்புக்குள் பழையாற்று தண்ணீர் புகுந்துள்ளது. அழிக்கால் பிள்ளைதோப்பு பகுதியிலும் குடியிருப்புகளை தண்ணீர் சூழ்ந்துள்ளது. வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்ததால் பொதுமக்கள் பரிதவிப்பிற்கு ஆளாகியுள்ளனர். வீடுகளுக்குள் புகுந்த தண்ணீரை அப்புறப்படுத்தும் பணியில் பொதுமக்கள் ஈடுபட்டுள்ளனர்.

    திற்பரப்பு அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது.

    இதனால் அருவியில் குளிப்பதற்கு இன்று 2-வது நாளாக தடை விதிக்கப்பட்டுள்ளது. பேரூராட்சி நிர்வாகம் சார்பில் அதற்கான அறிவிப்பு பலகை அங்கு வைக்கப்பட்டுள்ளது. தொடர் மழையின் காரணமாக நேற்று ஒரே நாளில் 15 வீடுகள் இடிந்து விழுந்துள்ளது. அகஸ்தீஸ்வரம், கல்குளம், திருவட்டார், கிள்ளியூர் தாலுகாக்களில் 9 மரங்களும் வேரோடு சாய்ந்தன. அகஸ்தீஸ்வரம் தாலுகாவுக்குட்பட்ட பகுதிகளில் 3 மின்கம்பங்கள் சேதம் அடைந்தது.

    இதையடுத்து மின்வாரிய அதிகாரிகள் உடனடியாக அதை சரி செய்யும் பணியில் ஈடுபட்டனர். மலையோர பகுதிகளில் கொட்டி தீர்த்து வரும் மழையினால் குலசேகரம், அருமனை, சுருளோடு, தடிக்காரன்கோணம் பகுதிகளில் உள்ள ரப்பர் தோட்டங்களை தண்ணீர் சூழ்ந்துள்ளது. ரப்பர் மரங்களில் கட்டப்பட்டுள்ள சிரட்டைகளிலும் மழைநீர் தேங்கி நிற்கிறது. இதனால் ரப்பர் பால் உற்பத்தி அடியோடு பாதிக்கப்பட்டு உள்ளது. மழைக்கு தாழக்குடி அருகே மீனமங்கலம் பகுதியில் வீடு இடிந்து ஒருவர் பலியான நிலையில் நேற்று இரவு குலசேகரம் பகுதியில் மின்சாரம் தாக்கி ஒரே குடும்பத்தை சேர்ந்த கர்ப்பிணி உட்பட 3 பேர் பலியாகி உள்ளனர். மாவட்டம் முழுவதும் மழைக்கு நேற்று ஒரே நாளில் 4 பேர் பலியாகி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

    • தக்கலை தீயணைப்பு துறையினரும், இரணியல் காவல் துறையினரும் உடலை மீட்டனர்
    • இவரது மனைவி உடல் நலக் குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

    கன்னியாகுமரி:

    இரணியல் அருகே உள்ள நெட்டாங்கோடு என்ற இடத்தை சேர்ந்தவர் சுரேஷ் (வயது 43) பெயிண்டர். இவரது நண்பர் ஒருவருக்கு சமீபத்தில் குழந்தை பிறந்துள்ளது. இதை கொண்டாட நண்பர்களுடன் நேற்று வில்லுக்குறி மாம்பழத்துறையாறு அணை பகுதிக்கு சென்றுள்ளனர். அங்கு நண்பர்களுடன் சமைத்து சாப்பிட்டுவிட்டு மதியம் அணையில் குளித்துள்ளனர்.

    அப்போது எதிர்பாராத விதமாக ஆழப்பகுதிக்குச் சென்ற சுரேஷ் தண்ணீரில் தத்தளித்துள்ளார். அவரை நண்பர்கள் மீட்க முயன்றனர். ஆனால் அதற்கு பலன் கிடைக்கவில்லை. சிறிது நேரத்தில் சுரேஷ் தண்ணீரில் மூழ்கிவிட்டார். இது குறித்து தக்கலை தீயணைப்பு துறைக்கும், இரணியல் காவல் துறைக்கும் தகவல் தெரிவித்தனர். தக்கலை தீயணைப்பு நிலைய அலுவலர் ஜீவன்ஸ் தலைமையிலான தீயணைப்பு மற்றும் மீட்பு பணி வீரர்கள் தண்ணீரில் இறங்கி பல மணி நேரம் தேடி சுரேஷின் உடலை மீட்டனர். இரணியல் போலீசார் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    தண்ணீரில் மூழ்கி பலியான சுரேஷிற்கு ஒரு மகனும் ஒரு மகளும் உள்ளனர். இவரது மனைவி உடல் நலக் குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவருக்கான உணவை மருத்துவமனைக்கு கொண்டு செல்ல நேற்று காலை உறவினர்கள் கூறியுள்ளனர். நண்பர்களுடன் வில்லுக்குறி சென்று விட்டு உடனடியாக வந்து மருத்துவமனைக்கு செல்வதாக சுரேஷ் கூறிச் சென்றுள்ளார். ஆனால் குளிக்கும் போது எதிர்பாராத விதமாக தண்ணீரில் மூழ்கி பலியாகி விட்டார்.

    ×